Thursday, April 1, 2010
ஒரு புது சகாப்தம்
நண்பர்களே உங்களுக்காக ஒரு புது சகாப்தத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேன்.அது வேறு யாரும் இல்லை.என் இதய சங்கரன். ஆமாம். அவன் ஒரு இமயம். எவரெஸ்ட். கஞ்சன் ஜங்கா. சொல்லி கொண்டே போகலாம். என்னா அறிவாளி? எனக்கு நாக்க புடிங்கிக்கிட்டு சாகலாம் போல தோணுது.பரவாயில்லை.அவனோட ப்ளாக்க நான் மட்டும்தான் படிக்கிறேங்கிரதால உயிரோட இருக்குறேன்.கடவுளே உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா?
Friday, March 26, 2010
என்னடா இறைவா இது சோதனை?
ப்ளாக் ஆரம்பித்து முழுதாக ஒரு நாள் ஆகிவிட்டது.இதுவரை யாரும் படிக்கவில்லை. ஆனாலும் கலங்க மாட்டான் கணேசன்.மீண்டும் தனது அற்புத அறிவை அழகாக உபயோகித்து ஒரு அருமையான கவிதை இதோ உங்களுக்காக!...
நிரம்பி வரும் நீரை
தடுக்கும் வழி தெரியவில்லை.
நினைவுக்கூட்டை நிதானமாய்
கடந்து போகின்றன,
தாகத்தில் தவித்த நாட்கள்......
நிரம்பி வரும் நீரை
தடுக்கும் வழி தெரியவில்லை.
நினைவுக்கூட்டை நிதானமாய்
கடந்து போகின்றன,
தாகத்தில் தவித்த நாட்கள்......
சாரு நிவேதிதா- ஒரு சிம்போனி
ஜீரோ டிகிரி - வாசித்த பின்பு வார்த்தைகள் அற்று போன அந்த தருணத்தை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன ஆசை என்றால் இதை படித்த பின்பாவது நான் ஒன்றுமே தெரியாத முட்டாள் என்பதை நான் என் நண்பர்களிடமாவது ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும் மாட்டேன்.நாங்கல்லாம் யாரு! கவிஞர் இல்ல! அட போங்கடா! போயி புள்ளங்கள படிக்க வைங்கடா! அப்படியே நீங்க ஜீரோ டிகிரி படிங்கடா!
நேற்றைய தவறுகள்......
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் வகுப்பில் ஆனந்தி என்று ஒரு பெண் இருந்தாள். அவளை செல்லமாக எல்லோரும் யு வடிவ குழாய் என்று கேலி செய்வோம்.ஒரு முறை அது எங்கள் ஆசிரியருக்கு தெரிந்து போய்மிகப் பெரிய கலவரமானது. அன்றே மன்னிப்பு கேட்டு விட்டாலும் கூட அந்த பெண் நினைவு வந்தாலே அந்த பட்ட பெயரும் நினைவு வந்து விடுகிறது. ஆகவே நண்பர்களே சுவாரஸ்யமான கதை எழுதக்கூடிய அளவிற்கு சரக்கு உள்ள விஷயம் இது. தற்போதுதான் அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்தது.யாருக்கேனும் இதில் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யமான அந்த கதை தென்படுகிறதா? ஆம் என்றால் உடனே ப்ளாக் பண்ணுங்கப்பா.இல்லையென்றால் உங்களின் வாழ்வின் நடந்த இதே போன்ற பட்ட பெயர் விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
லவ்,செக்ஸ்,அவுர் தோக்கா
இதோ வந்தே விட்டது இந்தியாவின் முதல் செல் போன் காமெராவில் எடுக்கப்பட்ட முழுமையான படம் என்று விளம்பரம் செய்திருந்தால் கண்டிப்பாக எல்லோரும் நம்பியிருப்பார்கள்.இப்படி ஒரு படம் இந்தியாவில் சாத்தியமா ? என்ற கேள்விக்கு தோல் நிமிர்த்தி பதில் சொல்லலாம் டைரக்டர் திவாகர் பானர்ஜி.புது வடிவிலான திரைக்கதை,நம்பவே முடியாத கேமரா கோணங்கள் (முழுக்க முழுக்க டிஜிட்டல் காமெராவை கொண்டு ஒரு பார்வையாளனின் கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது) என ஒரு புது அனுபவத்தை நமக்கு அளிக்கிறது. ஹாலிவுட்டில் ஏற்கனவே இந்த மாதிரி வடிவமைப்பில் சில படங்கள் வந்திருந்தாலும் இந்த கால கட்டத்தில் இந்தியாவிற்கு தேவையான படம் இது. என்னடா விமர்சனத எழுதாம சும்மா டெக்னிகல் விஷயத்த பத்தி மட்டுமே உளர்ரானே! அப்படின்னு பார்க்குறீங்களா? மேட்டர் இருக்கு.போயி உடனே படம் பாருங்க. படத்தோட கதை புரியுதோ இல்லையோ ஆனால்டெக்னிகல் மேட்டர் பத்தி நீங்க பேசிக்கிட்டே இருப்பீங்க அதுக்கு நான் காரண்டீ. ஒருவேளை டெக்னிகல் மேட்டர் புரியலன்னாலும் ஒரு சூப்பர் பிட்டு இருக்கு படத்துல. சோ காசு கண்டிப்பா நஷ்டம் ஆகாது. சோ கோ பார் இட்.
வாக எல்லோரும் பழகலாம்......
எனக்கு வேணும், எனக்கு வேணும், சொக்கா! அப்பவே சொன்னனே கேட்டியா? இந்த நாடகம் எத்தனை நாள் நடக்குதுன்னு பாப்போம்.
நீ காற்று
நான் மரம்
தலையாட்டுமா
நம் குடும்பம்.
ஐயோ! கவித கவித
நண்பர்களே அன்பர்களே வாங்க எல்லோரும் பழகலாம்.
நீ காற்று
நான் மரம்
தலையாட்டுமா
நம் குடும்பம்.
ஐயோ! கவித கவித
நண்பர்களே அன்பர்களே வாங்க எல்லோரும் பழகலாம்.
Subscribe to:
Comments (Atom)